Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்..

    பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்..

    பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று அவரது இல்லத்தில் காலமானார். 

    வாணி ஜெயராம் – வேலூரில் பிறந்த இவர் 19 மொழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி பெரும் சாதனையை படைத்துள்ளார். கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் பல கச்சேரிகளை நடத்தியும், பங்குபெற்றும் வந்த நிலையில், 1971-ஆம் ஆண்டு  ‘குட்டி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். 

    அன்று முதல் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் வாணி ஜெயராம் காலமானார்.  அவருக்கு வயது 78. கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலமற்று இருந்தவர், வீட்டில் கிழே விழுந்ததாக கூறப்படுகிறது. 

    முன்னதாக, குடியரசு விழாவையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதைப் பெறுவதற்கு முன்பாக அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இசையுலகத்தைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    வாணி ஜெயராம் பாடிய “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..”, “மல்லிகை என் மன்னன் மயங்கும்..”  போன்ற எண்ணற்ற பாடல்கள் இன்றும் பலருக்கு விருப்ப பாடலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ‘ஜான்வி கபூர் தமிழ் படங்களில் ஒப்பந்தமாகவில்லை’ – போனி கபூர் ட்விட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....