Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவசூலில் அசத்தும் திருமலை எழுமலையான் கோயில்; வெளிவந்த அறிக்கை!

    வசூலில் அசத்தும் திருமலை எழுமலையான் கோயில்; வெளிவந்த அறிக்கை!

    திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை நடப்பு நிதியாண்டில் 1500 கோடியை நோக்கி பயணித்து வருகிறது. 

    2020-2023 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 10 மாதங்களில் மட்டுமே 1275 கோடியே 31 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 

    ஏப்ரல் முதல் ஜனவரி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வசூல்:

    1. ஏப்ரல் மாதம்- 126 கோடியே 65 லட்சம் ரூபாய் 
    2. மே மாதம்- 130 கோடியே 29 லட்சம் ரூபாய் 
    3. ஜூன் மாதம்- 123 கோடியே 76 லட்சம் ரூபாய் 
    4. ஜூலை மாதம்- 139 கோடியே 75 லட்சம் ரூபாய் 
    5. ஆகஸ்ட் மாதம்- 138 கோடியே 34 லட்சம் ரூபாய் 
    6. செப்டம்பர் மாதம்- 122 கோடியே 19 லட்சம் ரூபாய் 
    7. அக்டோபர் மாதம்- 122 கோடியே 80 லட்சம் ரூபாய் 
    8. நவம்பர் மாதம்- 125 கோடியே 30 லட்சம் ரூபாய்
    9. டிசம்பர் மாதம்- 123 கோடியே 16 லட்சம் ரூபாய் 
    10. ஜனவரி மாதம்- 123 கோடியே 7 லட்சம் ரூபாய் 

    இதற்கு முன்பு இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. 

    இந்த நிலவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால் நடப்பு பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களில் மட்டும் ஏழுமலையானுக்கு மேலும் 250 கோடி ரூபாய் காணிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 1500 கோடி வசூல் ஆகி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மதம், கடவுளுக்கு எதிரான கருத்துகளை நீக்கவில்லை; விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....