Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கணவன் மனைவியான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா!

    கணவன் மனைவியான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா!

    பாலிவூட் பிரபலங்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் நேற்று திருமணம் செய்துக்கொண்டனர். 

    பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள்  சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி. இதில் கியாரா அத்வானி எம்.எஸ் தோணி திரைப்படத்தில் சாக்‌ஷி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார். 

    இருவருக்குமே ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. 

    ஆனால், இந்தத் தகவல்களை மறுத்தோ அல்லது உறுதி செய்தோ எந்த ஒரு கருத்தையும் இருவர் தரப்பிலிருந்தும் வெளியிடவில்லை. இதனால், அவர்கள் காதலிப்பதை ஏறத்தாழ பலரும் உறுதியாக்கினர். கியாராவும், சித்தார்த்தும்  ஷெர்ஷா படத்தில் ஒன்றாக நடிக்கும்போது காதலில் விழுந்தனர். 

    இந்நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானியின் திருமணம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி  நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படியே, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நேற்று இரவு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். 

    திருமணம் முடிந்த பிறகு, கியாரா வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, “எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுளளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    தற்போது, கியாரா அத்வானி அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் என்பதும், அதே நேரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....