Tuesday, April 30, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பியர் பிடிக்குமா? விஸ்கி பிடிக்குமா? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்

    பியர் பிடிக்குமா? விஸ்கி பிடிக்குமா? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்

    எந்த வகை மதுவை குடிக்க விருப்பம் என ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். 

    நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றன.

    இதனால், நடிகை ஸ்ருதிஹாசன் ஆனந்தத்தில் உள்ளார். இந்நிலையில், ரசிகர்களுடன் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.

    இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ எனப் பதிலளித்துள்ளார். 

    மேலும், ஸ்ருதிஹாசனின் இந்த பதில் குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    ஜவான் படத்தில் விஜய்; இவ்வளவு நேரம் வருவாரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....