Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்தியா ...

    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்தியா …

    ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் போட்டியில் இந்தியா 25 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

    எகிப்தில் கடந்த புதன்கிழமை 10 மீட்டர் ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரமிதா 6-12 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் யிங் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அதே பிரிவில் மற்றொரு இந்தியரான திலோத்தமா சென் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    இத்துடன், 50 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களையும் வென்று இந்திய மகளிர் அசத்தினர். திவ்யான்ஷி முதலிடமும், வர்ஷா சிங் இரண்டாம் இடமும், தியானா மூன்றாம் இடமும் பிடித்தனர்.

    மேலும், 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ரிதம் சங்வான் 573-575 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியாவ் ஜியாருய்ஸர்வானிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றார். 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் விஜய்வீர் சித்து 574 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். 

    மொத்தத்தில் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 10 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 25 பதக்கங்களுடன்  இந்தியா 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 18 தங்கம் உள்பட 37 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

    இதையும் படிங்க: ‘சுயநலமா விளையாடாதீங்க’ கோலிக்கு உள்குத்தாக ‘அட்வைஸ்’ செய்த கம்பீர்! கடுப்பில் ரசிகர்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....