Wednesday, May 1, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஷாருக்கான் திரைப்படத்தில் இப்படியொரு கிளைமேக்ஸ் சண்டையா....அதகளம் செய்யும் அட்லி!

    ஷாருக்கான் திரைப்படத்தில் இப்படியொரு கிளைமேக்ஸ் சண்டையா….அதகளம் செய்யும் அட்லி!

    ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

    ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான், ஜவான் .  ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாருக்கான் இறுதியாக நடித்த திரைப்படமான ஸீரோ 2018-ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களாக அவர் திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. 

    ஷாருக்கான் நடித்த படங்கள் வரிசையாக படுதோல்வியினைச் சந்தித்திருந்த நிலையில், நல்ல கதைக்காக பல்வேறு இயக்குனர்களை அணுகி பேசி வந்துள்ளார். அப்போதுதான் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாயின. இந்த திரைப்படத்திற்கு டைகர் என்று முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. கொரோனாவினால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், பின்பு படத்திற்கான டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. 

    இதையும் படிங்க : பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல்களின் அடுத்த கட்டம்..வெளிவந்த வீடியோக்கள்!

    இந்நிலையில், தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது.

    இந்த படப்பிடிப்பில்,  நடிகர் ஷாருக்கான் பெண்களுடன் சண்டையிடும் காட்சி எடுக்கப்பட்டதாகவும் அதில் 200-க்கும் அதிகமான பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஜவான் திரைப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....