Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்என்னது இடத்த காணோமா? 'வடிவேலுவின் கிணறு காணோம் பாணியில்' எய்ம்ஸ் மருத்துவமனையை தேடிய எம்.பிக்கள்

    என்னது இடத்த காணோமா? ‘வடிவேலுவின் கிணறு காணோம் பாணியில்’ எய்ம்ஸ் மருத்துவமனையை தேடிய எம்.பிக்கள்

    ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை; எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என எம்.பிக்கள் பாரதிய ஜனதாவை கேலி செய்துள்ளனர்.

    மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் 100 இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

    மேலும் இதுகுறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்ததும் அதை பிரதமர் திறந்து வைப்பார்’ என பதிவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், 95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரான தாகூர் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    அன்பு ஜே.பி.நட்டா ஜி, 95% முடிந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    பாஜக ஆட்சி, புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூரும் போனோம். 

    கீழ்வானம் வரை மதுரை கிழவி  வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....