Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிடீரென 50 மீட்டருக்கு உள்வாங்கிய கடல் நீர்: சுனாமி வருமோ என்று அச்சமடைந்த மக்கள்...!

    திடீரென 50 மீட்டருக்கு உள்வாங்கிய கடல் நீர்: சுனாமி வருமோ என்று அச்சமடைந்த மக்கள்…!

    கோழிக்கோட்டில் திடீரென நேற்று சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள் வாங்கியதால், சுனாமி வருமோ என்ற அச்சத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியது.

    சுனாமி பேரலை நிகழ்விக்கிற்கு பிறகு அடிக்கடி கடல் சீற்றமாக இருப்பது, உள்வாங்குவது போன்ற நிகழ்வுகள் , அங்காங்கு அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

    இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, கோழிக்கோடு நைனாம் வலப்பு பகுதியில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்ல கூடிய கோத்தி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென கடல் 50 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியுள்ளது.

    இது முதலில் “மாலையில் சுமார் 30 மீட்டருக்கு உள்வாங்கியதாம். பின்னர், படிப்படியாக 50-70 மீட்டருக்கு அதிகரித்துளளது .இதை கண்ட சுற்றுலாப் பயணிகள் சுனாமியாக இருக்குமோ என்று அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிகழ்வை கேள்விப்பட்ட அப்பகுதி மாவட்ட ஆட்சியர் நரசிம்முகாரி டிஎல் ரெட்டி, உடனடியாக அப்பகுதி மக்களுக்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பிறகு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு இரவு நேரம் என்பதால், இப்போது எவ்வளவு தூரம் கடல் உள்வாங்கி இருக்கிறது என்பதை சரியாக அளவிட முடியாது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இப்படியே போன அதிபர் ஆட்சிதான்! ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – மம்தா ஆவேச பேச்சு

    அதுமட்டுமின்றி கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் தங்களது பங்கிற்கு அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஒன்றா எந்த அறிகுறியும் தற்போதைக்கு இல்லை. அதனால் கடல் நீர் உள்வாங்கியது குறித்து கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளது.

    இதற்கு பிறகே அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தார்களாம்.இருப்பினும் கடல் நீர் உள் வாங்கி இருப்பதை காண, ஏரளமான மக்கள் கூட்டம் கூட்டமாகவர ஆரம்பித்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி கடல் உள்வாங்கிய பிறகு அப்பகுதியில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று நினைத்தும் வந்தவர்களும் அதிகமாம்.அப்படி வந்த மக்கள் அனைவரும் கரை ஒதுங்கிய மீன்களையும் பிடித்துச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் கோழிக்கோடு நைனாம் வலப்பு கடற்கரைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருவதை கேள்விப்பட்ட கேரளா காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்பப்படுத்தியதோடு ,தடுப்பு சுவர்களையும் ஏற்படுத்தி மக்கள் அந்த பகுதிக்கு போகாத வண்ணம் செய்துள்ளனர்.

    பிறகு உள் வாங்கிய கடல் நீர் எப்போது வேண்டுமானாலும் இரட்டிப்பு வீரியத்துடன் வெளியே வரலாம் என்பதால் உடனடியாக இங்கிருந்து எல்லோரும் களைந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் எச்சரித்து ,வந்த மக்களை திருப்பி அனுப்பினார்களாம்.

    இதனையடுத்து, உள்வாங்கிய கடல் நீர் நேற்று இயல்பு நிலைக்கு வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கூட்ட நெரிசல் சிக்கி 120 பரிதாப பலி! ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....