Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்! தாஜ்மஹால் வழக்கில் கடுப்பான நீதிபதி

    எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்! தாஜ்மஹால் வழக்கில் கடுப்பான நீதிபதி

    தாஜ்மஹால் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    சுர்ஜித்சிங் யாதவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், முகலாய மன்னர் ஷாஜஹானால் தாஜ்மஹால் கட்டப்பட்டது தொடர்பான தவறான வரலாற்று உண்மைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதன் காரணமாக தவறான தகவல்களை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சுர்ஜித்சிங் யாதவ் கோரி இருந்தார். 

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை, எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், “பொதுநல வழக்குகள் மீன்பிடி விசாரணைக்காக அல்ல. தாஜ்மஹால் 400 ஆண்டுகளாக உள்ளது. அது இருக்கட்டும். நீங்கள் இந்திய தொல்லியல் துறைக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை அளியுங்கள். அவர்கள் முடிவு செய்யட்டும். 

    எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள். 400 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்தையும் திறக்க முடியாது. நீதிமன்றங்களுக்கு தொல்லியல் துறையில் நிபுணத்துவம் இல்லை” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

    கால்பந்து உலகக் கோப்பை: டை பிரேக்கரால் வீழ்ந்த ஜப்பான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....