Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வ அம்மாவாசை - ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

    சர்வ அம்மாவாசை – ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

    சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்கினி தீர்த்தக் கடலில் புனித நீராட ஏரளாமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

    இந்தியவாவில் புண்ணிய தளங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது ராமேசுவரம். அங்குள்ள அக்கினி தீர்த்த கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்ய ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி, மகாளைய அமாவாசை, சர்வ அம்மாவாசை நாள்களில் பத்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். 

    இந்நிலையில், ஆவணி மாதத்தின் சர்வ அம்மாவாசையான இன்று (ஆகஸ்ட் 26) ராமேசுவரம் அக்கினி தீர்த்த கடலில் புனித நீராட ஏரளாமான பத்தர்கள் குவிந்துள்ளனர். 

    இவ்வாறு, புனித நீராட குவிந்த பக்தர்கள் இறந்து போன, தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்வார்கள். அதற்காக, அவர்கள் கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து வாழிபாடு செய்வார்கள். 

    இதைத்தொடர்ந்து, கோயிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular