இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ள வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் படம்தான், லியோ. நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வர லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களால் தென்னிந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், சஞ்சய் தத் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எனது சகோதரனாக, மகனாக, குடும்பமாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கட்டும். உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடன் நான் இருப்பேன். லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்தின் இந்த பதிவை லோகேஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.