Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவன்முறையைத் தூண்டுகிறாரா இஸ்லாமிய மதத்தலைவர்?

    வன்முறையைத் தூண்டுகிறாரா இஸ்லாமிய மதத்தலைவர்?

    நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு தனது வீட்டை பரிசளிப்பேன் என்று அறிவித்த அஜ்மீர் தர்காவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் சல்மான் சிஷ்தியை ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

    பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, நூபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. மேலும், அவரின் கருத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. மத உணர்வை புண்படுத்தியதற்காக இவரின் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

    இந்நிலையில், நூபுர் சர்மாவின் கருத்து குறித்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் சல்மான் சிஷ்தி காணொளி வெளியிட்டார். அக்காணொளியில், நூபுர் சர்மாவின் ’தலையை என்னிடம் யார் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு வீட்டைப் பரிசளிப்பேன்’  என்று கூறியிருந்தார். இந்த காணொளி சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையடுத்து, சல்மான் சிஷ்தி மீது ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு எதிராக செயல்படுவது, வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று சல்மான் சிஷ்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

    சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் “நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்ததற்காக, முகம் மட்டுமல்ல, உடலும் மன்னிப்பு கேட்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியதற்கு தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உதய்பூர் கொலை காணொளி திட்டமிட்டே பகிரப்பட்டது – என்ஐஏ தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....