Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்எங்களுக்கு உள்ள ஒரே வழி இதுதான் - ரோஹித் சர்மா!

    எங்களுக்கு உள்ள ஒரே வழி இதுதான் – ரோஹித் சர்மா!

    மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில் மேற்கிந்திய தீவுகள், இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

    india vs west indies

    நாளை முதல் ஒரு நாள் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், கே.எல்.ராகுல் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் தவானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    rohith

    மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலும் குவாரன்டைனில் உள்ளார். இதனால் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.

    இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதற்கு பதில் அளித்துள்ளார். அப்பதிலில், “எங்களுக்கு உள்ள ஒரே ஆப்ஷன் இஷான் கிஷன் மட்டுமே. அதனால் அவர் என்னுடன் முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவார்”  என தெரிவித்துள்ளார்.

    ishan kishan

    ஏற்கனவே இந்தியன் பிரியர் லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணிக்காக இஷான் கிஷன் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ரிஷப் பந்த் (வி.கே), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் (வாரம்), கீரன் பொல்லார்ட் (கேட்ச்), பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், அல்ஜாரி ஜோசப், ஹேடன் வால்ஷ், கெமர் ரோச், என்க்ருமா போனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....