Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாராக்கெட் வேகத்தில் அரிசியின் விலை! சமாளிப்பார்களா சாமானியர்கள்?

    ராக்கெட் வேகத்தில் அரிசியின் விலை! சமாளிப்பார்களா சாமானியர்கள்?

    இந்தியாவில் ஐந்தே நாட்களில் அரிசியின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில்,  பாசுமதி அல்லாத அரிசி ரகங்களின் இறக்குமதிக்கு அக்டோபர் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுமென அந்நாட்டு அரசு கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது. மேலும் அரிசி இறக்குமதிக்கான வரியை 62.5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்துள்ளதை அடுத்து, இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

    வங்கதேச அரசு அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க கூடுமென்ற அச்சம் காரணமாக முதல் முறையாக  முன்கூட்டியே இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்து வருகிறது . இதற்கு முந்தைய காலங்களில் பொதுவாக, வங்கதேசம், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மட்டுமே அரிசி இறக்குமதி செய்யும்.

    ரஷ்ய – உக்ரைன் போரின் போது கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்ததால் வங்கதேசத்தில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அரிசி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வங்கதேசம் வழக்கமாக அரிசியினை கொள்முதல் செய்யும். இந்த மூன்று மாநிலங்களில் தற்போது சாதாரண ரக அரிசி விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மூன்று மாநிலங்களிலும் அரிசி விலை உயர்வின் காரணமாக, பிற மாநிலங்களிலும் அரிசி விலை 10 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு முன்கூட்டியே பாசுமதி அல்லாத அரிசி ரக இறக்குமதிக்கு வங்கதேசம் அனுமதித்திருப்பது, இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை அளித்துள்ளது.

    சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய அரிசி நுகர்வோர் நாடாக உள்ள இந்தியா, உலக அரிசி வர்த்தக சந்தையில் 40 சதவீதத்திக்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு கோடிக்கும் மேல் சம்பளம்; சுருட்டிக் கொண்டு ஓடிய ஊழியர்! தேடும் நிறுவனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....