Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகை குடியரசு தினவிழா வரவேற்பு அழைப்பிதழில் 'தமிழ்நாடு'

    ஆளுநர் மாளிகை குடியரசு தினவிழா வரவேற்பு அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’

    ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என அச்சிடப்பட்டு இருக்கிறது. 

    தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக காசி தமிழ்சங்கத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பது சரியாக இருக்கும் என கூறி இருந்தார். 

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையாற்றிய பொழுது தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை அவர் வாசிக்க மறுத்து அடுத்தடுத்த பக்கங்களை திருப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் உரைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானம் கொண்டு வரப்பட்டதும் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து உடனே புறப்பட்டு சென்றார். 

    அதே சமயம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் தமிழ்நாடு இலச்சினை இன்றி மத்திய அரசின் முத்திரை மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. 

    இதையடுத்து, டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநர் மீது புகார் அளித்தனர். இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி சென்று வந்தார். மேலும் தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்தார். 

    இந்நிலையில், வருகிற 26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரையும் தமிழ்நாடு ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லரின் மேக்கிங் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....