Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுரிஷிவந்தியத்தில் மதமாற்ற புகார்கள்; தொடரும் பிரச்சனை..

    ரிஷிவந்தியத்தில் மதமாற்ற புகார்கள்; தொடரும் பிரச்சனை..

    சமீப காலங்களாக மதமாற்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன. ரிஷிவந்தியத்தில் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக நோட்டீஸ் கொடுத்து வந்தவர்கள் முகத்தில் இந்து அமைப்பினர் விபூதியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அப்பகுதியில் உள்ள இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக நேசிக்கின்ற கொலைகாரன், தெய்வ சத்தம், என்ற தலைப்பில் துண்டு நோட்டீஸ்களை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்,

    தகவலறிந்த இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் நீங்கள் எப்படி இந்த நோட்டீசை வழங்கி இந்துக்களை மதமாற்றத்தில் ஈடுபடு வைப்பீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு விபூதியை கிறிஸ்தவர்கள் மீது அள்ளி வீசினர்,இதனால் பதற்றமடைந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர், தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிறிஸ்தவர்களை தகவலை எழுதி வாங்கிவிட்டு அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்ட போலீசார் அவர்களை பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கிறித்துவ மதம் சார்ந்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இது குறித்து தகவறிந்த இந்து முன்னணியினர் கள்ளக்குறிச்சி – சேலம் சாலையில் வேனில் வந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாகர்கோவிலை அடுத்த இரணியல் கண்ணாட்டுவிலையில் உள்ள அரசு பள்ளிகள் தையல் பயிற்சி ஆசிரியர் மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சித்தார் என புகார் எழுந்துள்ளது.

    தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் கிருத்துவ மதத்தை புகுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும், பைபிள் தான் நல்ல நூல் என்றும், இந்துத்துவவாதிகள் சாத்தான்கள் என்று அவர் பேசியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. பின்னார் விசாரணை அடிப்படையில் அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மனக் குழப்பங்கள்…சுதந்திர தன்மை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....