Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆப்கானிஸ்தானுடன் விளையாட மறுக்கும் ஆஸ்திரேலியா; எதிர்வினை ஆற்றிய ரஷித்கான்!

    ஆப்கானிஸ்தானுடன் விளையாட மறுக்கும் ஆஸ்திரேலியா; எதிர்வினை ஆற்றிய ரஷித்கான்!

    எங்களுடனான தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறுவதாக அறிவித்ததைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் தெரிவித்துள்ளார். 

    ஆப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகிற மார்ச் மாதம் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 

    இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கையில், “ஆஃப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள மகளிர் மற்றும் ஆடவர்களுக்கான விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவாக உள்ளது. மேலும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து, அந்நாட்டு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் பாடுபடும்” என்று தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘மார்ச் மாதத்தில் எங்களுடனான தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறுவதாக அறிவித்ததைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். எனது நாட்டுக்காக விளையாடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் உலக கிரிக்கெட் அரங்கில் நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்து வரும் இந்த நேரத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு எங்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.’ என்று தெரிவித்துள்ளார். 

    மேலும், ‘ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தால், பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி யாருக்கும் சங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. எனவே, இப்போட்டியில் எனது எதிர்காலம் குறித்து தீவிரமாக பரிசீலிப்பேன். கிரிக்கெட் விளையாட்டுதான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கை. ஆதலால் இதில் அரசியல் வேண்டாம்.’ என்றும் ரஷித்கான் தெரிவித்துள்ளார். 

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரில் ரஷித்கான் நட்சத்திர வீரராக வலம் வந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தனுஷ் இயக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் இதுதானா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....