Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இது உடல்நலனுக்கு உகந்ததல்ல... ஆபத்தானது'? மரபணு மாற்ற கடுகு விதை குறித்து ராமதாஸ் எச்சரிக்கை

    ‘இது உடல்நலனுக்கு உகந்ததல்ல… ஆபத்தானது’? மரபணு மாற்ற கடுகு விதை குறித்து ராமதாஸ் எச்சரிக்கை

    மரபணு மாற்றம்‌ செய்யப்பட்ட கடுகு வகையின்‌ விதை உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இந்தியாவில்‌ மரபணு மாற்றம்‌ செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில்‌ பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன்‌ விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல்‌ அமைச்சகத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்பட்டு வரும்‌ மரபணு பொறியியல்‌ மதிப்பீட்டுக்‌ குழு அனுமதி அளித்திருக்கிறது. 

    இந்நிலையில், இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது; 

    மரபணு பொறியியல்‌ மதிப்பீட்டுக்‌ குழுவின் அனுமதி மூலம் இந்தியாவில்‌ மரபணு மாற்றம்‌ செய்யப்பட்ட கடுகு பயிரின்‌ வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில்‌ தொடங்கி விடும்‌. இதனால்‌ இந்தியாவில்‌ உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்‌ ஏற்படக்கூடும்‌.

    மரபணு மாற்றம்‌ செய்யப்பட்ட கடுகு பயிர்களைக்கொல்லிகளை தாங்கி வளரும்‌ தன்மை கொண்டதாகும்‌. மரபணு மாற்றப்பட்ட கடுகு ஓரிடத்தில்‌ பயிரிடப்பட்டால்‌, அந்த பகுதியில்‌ சாகுபடி செய்யப்படும்‌ மற்ற பயிர்களுக்கும்‌ இந்த தன்மை ஏற்படக்கூடும்‌. அதனால்‌, குறிப்பிட்ட காலத்துக்குப்‌ பிறகு களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி ஆகியவற்றை சகித்துக்‌ கொண்டு வளரும்‌ பயிர்களின்‌ வகைகள்‌ அதிகரித்து விடும்‌. இது சுற்றுச்சூழலுக்கு பெரும்‌ தீங்கை ஏற்படுத்தும்‌.

    எனவே, மரபணு மாற்றம்‌ செய்யப்பட்ட கடுகு வகையின்‌ விதை உற்பத்திக்கு தடை விதித்து, எந்த காலத்திலும்‌ அனுமதி அளிக்கப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க

    வேண்டும்‌ என்று கூறியுள்ளார்‌.

    இதையும் படிங்க: ட்விட்டரை வாங்கிய அடுத்த கணமே இந்தியருக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்! முதல் நாளே இப்படியா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....