Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆறு மணி நேரம் வரை நீடித்த மின்வெட்டு; 'இனி இப்படி நிகழக்கூடாது' - எச்சரித்த ராமதாஸ்!

    ஆறு மணி நேரம் வரை நீடித்த மின்வெட்டு; ‘இனி இப்படி நிகழக்கூடாது’ – எச்சரித்த ராமதாஸ்!

    நாகை, அரியலூர், தென்காசி, திருவாரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முன் அறிவிப்புகள் ஏதுமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இது குறித்து தமிழக மக்களும், கட்சியினர்களும் புகார் தெரிவித்தும், கண்டனங்கள் தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

    அப்பதிவில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தாங்க முடியாத அவதிக்கு ஆளானார்கள் என்றும் சில மாவட்டங்களில் சில மணி நேரமும், திருவாரூர் மாவட்டத்தின் சில இடங்களில் 6 மணி நேரம் வரையிலும்  மின்வெட்டு நீடித்தது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    “அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் சிரமப்பட்டனர். இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது” என்றும் தன் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். 

    மத்தியத் தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடை பட்டது தான் மின்வெட்டுக்கு காரணம் என்று மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணியாகும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    மேலும், தமிழ்நாடு மின்மிகை மாநிலமல்ல, தற்சார்பு மாநிலமும் அல்ல.  தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியவர், இனி இப்படி நிகழக்கூடாது என்றார். 

    நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 13-ஆம் தேதி தான் நான் எச்சரித்திருந்தேன்.  நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

    இதையும் படியுங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் மின்வெட்டு; அவதியில் பொதுமக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....