Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅவசர ஊர்தியில் காலணிகள் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்; வைரல் காணொளி

    அவசர ஊர்தியில் காலணிகள் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்; வைரல் காணொளி

    ராஜஸ்தானில் அவசர ஊர்தியில் காலணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    ராஜஸ்தான் மாநிலம், தௌசா அரசு மருத்துவமனையின் அவசர ஊர்தி ஓட்டுநர் ஒருவர் அவசர ஊர்தியில் மூட்டைகளில் காலணிகளை ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஏற்றிச் சென்றுள்ளார். 

    இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலானது. மேலும் அவசர ஊர்தியில் காலணிகளை ஏற்றிச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இந்தச் சம்பவம் குறித்து, தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி ஷிவ்ராம் மீனா, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட அவசர ஊர்தி ஓட்டுநர் ஏற்கனவே நீக்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவையும் அமைத்து இருப்பதாகவும், குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இது தீவிரமான விஷயம். இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார். 

    அவசர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் அவசர ஊர்தி வாகனத்தில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    லெஜெண்ட் சரவணன் லியோ படத்தில் இணைய வாய்ப்பா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....