Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையின் பல இடங்களில் பரவலாக மழை

    சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை

    சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. 

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரங்களுக்கு சென்னையில், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஆகஸ்ட் 2) தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. 

    சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், புரசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

    தொடர் மழை காரணமாக, காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.

    அதேவேளையில், நகரின் பல பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.

    கேரளாவில் அதி கனமழை வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....