Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா3 கோடி பயணிகளின் விவரங்கள் ஹேக்; மறுத்த ரயில்வே..

    3 கோடி பயணிகளின் விவரங்கள் ஹேக்; மறுத்த ரயில்வே..

    ஐஆர்சிடிசி அமைப்பிலும், சர்வர்களிலும் ஊடுருவல் நடைபெறவிவில்லை என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் முக்கிய போக்குவரத்தாக இருப்பது ரயில்வே. தினந்தோறும் கோடி கணக்கில் மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்திய ரயில்வே துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், இந்த ஹேக் மூலம் 3 கோடி ரயில் பயணிகளின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இதுமட்டுமல்லாமல், பயணிகளின் பெயர், இணைய முகவரி, அலைபேசி எண், பாலினம், முகவரி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இத்துடன் இந்த விவரங்கள் விரைவில் விற்பனைக்கு வருமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்நிலையில், ஐஆர்சிடிசி அமைப்பிலும் சரி, சர்வர்களிலும் ஊடுருவல் நடைபெறவிவில்லை என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ஹேக்கர்களிடமிருந்து கிடைத்திருக்கும் சில தகவல்களை பரிசோதனைக்கு உள்படுத்தியபோது, அதன் பேட்டர்ன், ஐஆர்சிடிசி தகவல் பதிவு அமைப்பின் பேட்டர்னுடன் ஒத்துப்போகவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    உலகக் கோப்பையில் பங்குபெறவுள்ள இந்திய அணி அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....