Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜக அரசு உங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் - ராகுல் காந்தி காட்டம்!

    பாஜக அரசு உங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் – ராகுல் காந்தி காட்டம்!

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆதிவாசி சத்தியகிரகா பேரணியில் கலந்துக் கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2014- ல் மோடி ஜி இந்தியாவின் பிரதமரானார். அதற்கு முன்னர் அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.

    பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது என்ன பணியை செய்யத் தொடங்கினாரோ, அதையே தற்போது மொத்த இந்தியாவிலும் செய்து வருகிறார். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என இரண்டு வகையான இந்தியாவை அவர் உருவாக்கி உள்ளார். இதற்கு குஜராத் மாடல் என்றும் பெயர் வைத்துள்ளார்.

    காங்கிரஸ் இதுபோன்ற இரண்டு இந்தியாவை விரும்பாது. பாஜக மாடலின்படி நீர், நிலம், காடு உள்ளிட்ட வளங்கள் பழங்குடியின மக்கள் மற்றும் பிற ஏழை மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு பணக்காரர்களுக்கு தரப்படுகிறது. மேலும் பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் இந்த ஆட்சியில் பறிபோனது.

    பாஜக அரசு நமக்கு எதையும் தராது, அதற்கு பதில் உங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்ளும். பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் சாலை, பாலம், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை குஜராத்தில் உருவாக்கியுள்ளனர். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியையோ, ஆரோக்கியத்தையோ கூட தராமல் மோடி அரசு ஏமாற்றுகிறது.

    கொரோனா போன்ற தொற்றுகளால், குஜராத்தில் 3 லட்சம் பேர் இறந்த போது, பால்கனியில் இருந்து பானைகளையும், சட்டிகளையும் அடித்து ஒலி எழுப்ப சொன்னார் மற்றும் உங்கள் மொபைல் விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள் என்று பிரதமர் கூறினார். இறந்தவர்களின் உடல்களால் கங்கை நதி நிரம்பியது. கொரோனா வைரஸால் நாட்டில் 50 முதல் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

    சிக்கிய 12 டன் மாம்பழம்; அழித்த உணவு பாதுகாப்புத்துறையினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....