Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இனி யாரும் என் அறக்கட்டளைக்கு 'நன்கொடை' வழங்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி...

    இனி யாரும் என் அறக்கட்டளைக்கு ‘நன்கொடை’ வழங்க வேண்டாம் – ராகவா லாரன்ஸ் அதிரடி ட்விட்

    இனி யாரும் ’லாரன்ஸ் தொண்டு அறக்கட்டளை’ க்கு நன்கொடை அளிக்க வேண்டாம் என ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

    ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேல் இணைந்து நடிக்கும் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்படிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 2005-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான், சந்திரமுகி. இத்திரைப்படத்தை பி.வாசு இயக்க, பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு போன்றவர்கள் நடித்திருந்தனர். 

    இந்நிலையில், சமீபத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசுதான் சந்திரமுகி 2-ம் பாகத்தையும் இயக்குகிறார்.

    இதையும் படிங்க: பிரின்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு – எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

    சந்திரமுகி 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 

    இந்நிலையில், தனது ட்விட்டர் பதிவில் தனது புகைப்படங்களை  வெளியிட்டுள்ள அவர் ‘சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை டிரான்ஸ்ஃபார்ம் செய்து வருகிறேன் என்றும் இதற்காக உதவிய சிவா மாஸ்டருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். 

    மேலும், ராகவா லாரன்ஸ் தான் வைத்துள்ள அறக்கட்டளை மூலம் பல மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் எனப் பலருக்கும் உதவி வருகிறார். 

    இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளார். அதில், ‘பலரும் தனக்கு உதவும் வகையில் தேவைப்படும் போதெல்லாம் இதுவரை நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி. தான் இப்போழுது மேலும் நிறையப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறேன்.

    ஆகையால், இனி மக்கள் சேவை செய்வதை முழுவதுமாக எனது பொறுப்பிலேயே எடுத்துக்கொண்டு, நானே அனைவருக்கும் உதவ உள்ளேன். ஆகையால், இதுவரை எனக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இனி யாரும் ’லாரன்ஸ் தொண்டு அறக்கட்டளை’ க்கு நன்கொடை அளிக்க வேண்டாம். உங்களின் அன்பு மட்டுமே போதுமானது. எனக்கு இதுவரை உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவை விரைவில் நடத்தவுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....