Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகனடாவில் அதிகரிக்கும் இனவாத தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு

    கனடாவில் அதிகரிக்கும் இனவாத தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு

    கனடாவில் கடந்த சில காலமாக இனவாத வெறுப்புத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

    இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கனடாவில் வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக விசாரித்து உரிமை நடவடிக்கை எடுக்கும்படி, கனடா அரசிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதல்களை கருத்தில் கொண்டு, கனடா செல்லும் இந்திய மக்களும், மாணவர்களும்  கவனமுடன் இருக்க வேண்டும். ஏற்கனவே அங்கு வாழும் இந்திய மாணவர்களும், இந்தியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

    அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரன்டோ, வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்கள் அல்லது madad.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதேபோல், துாதரகங்களில் பதிவு செய்வதன் மூலம், இந்தியர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக உதவி அளிப்பதற்கு வசதியாக இருக்கும்.

    இதையும் படிங்க: ரூ.3 கோடி செலவில் ”10 நிமிட குட்டி டூர்” – விண்வெளி சுற்றுலாவிற்கு தயாராகும் சீனா

    ஆய்வறிக்கை தகவல்: உலக அளவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. 

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) தலைவரும், அதன் இணை நிறுவனருமான ஜோயல் ஃபிங்கள்ஸ்டீன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

     இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள், மீம்ஸ் போன்றவை ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். வெள்ளை இனத்தவரும், இஸ்லாமியர்களும் இன்னும் பிறரும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.

    அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த சில நாட்களாகவே இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதேபோல் கீழ்த்தரமான விஷயங்கள் தற்போது பிரிட்டனிலும் நடந்துள்ளது. இந்துஃபோபியா என்ற இந்து வெறுப்பு மிகவும் சிக்கலானது. இந்த ஆபத்தான போக்கு கடந்த சில காலமாக வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேங்க் ஜான்சன், ‘மதங்களுக்கு எதிரான வெறுப்பு துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக நிறைய வெறுப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்துக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதை மதிக்க வேண்டும். இந்து வெறுப்பு பற்றி பேசுவது மிக சிரமமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....