Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்2023 ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே வீரராக 'ஜடேஜா'! வாங்க வந்தவர்களுக்கு 'நோ' சொன்ன அணி நிர்வாகம்

    2023 ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே வீரராக ‘ஜடேஜா’! வாங்க வந்தவர்களுக்கு ‘நோ’ சொன்ன அணி நிர்வாகம்

    ஜடேஜாவை டிரேட் செய்யும் முடிவு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    ரவீந்திர ஜடேஜா – இந்திய அணியை பொருத்தவரை மிக முக்கியமான ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். சர்வேத போட்டிகளில் மட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகளிலும்  ஜடேஜா மிக முக்கியமானவர்தான். 

    கடந்த ஐபிஎல்லின் போது சென்னை அணியின் கேப்டனாக முதலில் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னையில் தொடர் தோல்விக்கு பிறகு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் ஜடேஜா அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. 

    இப்படியான தகவல்களுக்கு மத்தியில், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் வேறு சில ஐபிஎல் அணிகள் ஜடேஜாவை தங்கள் அணிக்கு அனுப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திடம் அணுகியது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    மேலும், வரும் டிசம்பரில் நடைபெற இருக்கும் மினி ஏலம் நடப்பாண்டு நடைபெற இருப்பதாகவும், அந்த ஏலத்தில் ஜடேஜா விற்பனைக்கு வர இருப்பதாகவும், அதனாலேயே மற்ற அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

    ஆனால், இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம்  திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஜடேஜாவை டிரேட் (ஏலத்தில் விற்பனை) செய்யும் முடிவு இல்லை என்றும் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: அடித்து தூள் கிளப்பிய ரோஹித், டிகே! 2வது டி20-யில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....