Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி போராடி மீட்பு

    ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி போராடி மீட்பு

    திருவாரூர் அருகே உள்ள குன்னியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி வயது 45. இவருடைய வீட்டின் அருகே 15 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறு ஒன்று இருந்தது. அதில் இருந்து தண்ணீர் கிடைக்காததால் அப்படியே திறந்த நிலையில் காணப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து மூர்த்தி டார்ச் லைட் மூலமாக கிணற்றுக்குள் பார்த்தார். அப்போது கிணற்றுக்குள் நாய் குட்டி ஒன்று விழுந்து கிடப்பதை பார்த்தார். இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து கயிறு மூலமாக அந்த நாய் குட்டியை மீட்க முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சி பலன் அளிக்காமல் போகவே, மூர்த்தி உடனடியாக சென்னை பேரிடர் மேலாண்மை குழுவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுறுக்கு போட்டு கயிறு மூலம் நாய் குட்டியை மீட்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சி பலன் அளிக்காத காரணத்தினால் பொறுமையிழந்த மூர்த்தி நாய்க்குட்டியை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்கிற அடிப்படையில் ஜே.சி.பி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் 15 அடிக்கு குழி தோண்டி அதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் அதில் இறங்கி பத்திரமாக அந்த நாய்க்குட்டியை மீட்டுள்ளனர்.

    இதற்காக மூர்த்தி ரூ.30 ஆயிரம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. காலை 8.30 மணிக்கு ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த இந்த நாய்க்குட்டியை 5 மணி நேரம் போராடி மதியம் 1.30 மணிக்கு மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாய்க்குட்டியை வெளியில் எடுத்தவுடன் அதை மகிழ்ச்சி பொங்க மூர்த்தி தூக்கி கொஞ்சிய புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

    ஒரு நாய்க்குட்டிக்காக ரூ.30 ஆயிரம் செலவு செய்து அதனை உயிருடன் மீட்டதுடன் அந்த ஆள்குழாய் கிணற்றையும் முழுவதுமாக மூர்த்தி மூடி உள்ளார். மனித நேயம் இன்னும் மறித்துப் போகாமல் இருக்கிறது என்பதற்கு வாழும் ஆதாரமாக மூர்த்தி உள்ளதாக நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்! சிபிசிஐடி விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....