Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசி மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு காரணம் என்ன?

    தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு காரணம் என்ன?

    தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த இரு வாரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 ஆவது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன.

    இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் வருவதற்கு வாய்ப்புள்ளது.

    எனவே, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்று (ஆகஸ்ட் 19) காலை 6 மணி முதல் செப்டம்பர்  2-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நாளை நடைபெற உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....