Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தின விழாவுக்கு வந்த எகிப்து அதிபர்; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    குடியரசுத் தின விழாவுக்கு வந்த எகிப்து அதிபர்; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அப்தெல் சிசிக்கு திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். 

    நாளை நாடு முழுவதும் 74 ஆவது குடியரசுத் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை தில்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi) இன்று தில்லி வந்தார். 

    இன்று தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடியும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் உற்சாகமாக வரவேற்றனர். 

    இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்தெல் பட்டா எல் சிசி பேச்சு வார்த்தை நடத்துகிறார். மேலும் இந்தச் சந்திப்பின்போது வர்த்தகம், வேளாண்மை மற்றும் எண்மம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

    நாளை நடைபெறும் குடியரசுத் தின விழாவில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், எகிப்து நாட்டு ராணுவப் படையும் பங்கேற்க உள்ளது. அதே சமயம், தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாளை மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

    நீண்ட காலத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘பதான்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....