Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுரங்கம்மை வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது ? - மத்திய...

    குரங்கம்மை வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது ? – மத்திய சுகாதாரத்துறை

    குரங்கம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 3) வெளியிட்டுள்ளது. 

    உலக அளவில் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவற்றுள் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    இந்நிலையில், குரங்கம்மை தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

    குரங்கம்மை வருவதற்கான காரணம்: 

    குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு குரங்கம்மை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 

    குரங்கம்மை நோய் வராமல் இருக்க செய்யக் கூடியவை: 

    • குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமைப் படுத்துதல் வேண்டும். 
    • தண்ணீர் மற்றும் சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். 
    • குரங்கம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும். 
    • சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

    குரங்கம்மை நோய் வராமல் இருக்க செய்யக் கூடாதவை: 

    • குரங்கம்மை நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகள் உள்பட அவர், பயன்படுத்திய பொருள்களைப் பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது. 
    • குரங்கம்மை பாதிக்கப்பட்டவரின் துணிகளை துவைக்க கூடாது. 
    • குரங்கம்மை அறிகுறி உள்ளது என்று தெரிந்தால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. 
    • குரங்கம்மை குறித்த தவறான (உறுதி செய்யப்படாத) தகவல்களை பரப்பக் கூடாது.
    • குரங்கம்மை நோயைக் கண்டறிய 15 பரிசோதனை ஆய்வகங்கள் தயார்
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....