Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குடியரசுத் தலைவர் தேர்தல்; இவரும் இப்படி சொல்லிவிட்டாரா?

    குடியரசுத் தலைவர் தேர்தல்; இவரும் இப்படி சொல்லிவிட்டாரா?

    இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின.

    அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் பரூக் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினர்.

    ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என பரூக் அப்துல்லா கூறி விட்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி மறுப்புத் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது: “குடியரசுத் தலைவர் என்ற உயரிய பதவிக்கு வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தேர்வு செய்ய விரும்பி மரியாதைக்குரிய பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்தேன்.எதிர்க்கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் போது தேசிய ஒருமித்த கருத்தையும், எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு அப்பாற்பட்டு தேசிய சூழலையும் உருவாக்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். என்னை விட இதை சிறப்பாகச் செய்யும் மற்றவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேருமே போட்டியிட மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக, மும்பையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில், நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெடரல் வங்கி வட்டி விகிதம் மேலும் உயருமா? காத்திருக்கும் ஆபத்து!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....