Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி ஆண்டுதோறும் உயரப்போகும் மின் கட்டணம்...அதிருப்தியில் மக்கள்

    இனி ஆண்டுதோறும் உயரப்போகும் மின் கட்டணம்…அதிருப்தியில் மக்கள்

    தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிய மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்கிறது. ஆனால், அதன்பிறகான 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வானது ரூ.55 முதல் ரூ.1,130 வரை இருக்கிறது. 

    இந்நிலையில், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின்சார ஒழுங்குமுறை வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பணவீக்க சதவிகிதம் அல்லது தற்போதைய கட்டணத்திலிருந்து 6% மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி மின் கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....