Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'நான் நேற்று பலரை பயமுறுத்தி விட்டேன்' - நெஞ்சுவலி குறித்து மனம்திறந்த பாண்டிங்

    ‘நான் நேற்று பலரை பயமுறுத்தி விட்டேன்’ – நெஞ்சுவலி குறித்து மனம்திறந்த பாண்டிங்

    டெஸ்ட் தொடரின் நேற்றைய வர்ணனையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங் தற்போது அச்சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

    மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு இருபது ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்க உள்ளது. 

    இதில் மேற்கிந்திய தீவுகள் அணி இரு இருபது ஓவர் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது.

    இதையடுத்து, கடந்த 30-ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது . இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்று கொண்டிருக்கையில், கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்றே மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

    இந்நிலையில், தற்போது ரிக்கி பாண்டிங் நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது; 

    நான் நேற்று பலரை பயமுறுத்தி விட்டேன். எனக்கும் அச்சமூட்டிய தருணம் தான் அது. வர்ணனை அறையில் இருந்தபோது நெஞ்சில் வலி ஏற்பட்டது. சில உடற்பயிற்சிகளைச் செய்து அதிலிருந்து விடுபட நினைத்தேன். வர்ணனை செய்துகொண்டிருக்கும்போது கவனம் திசை திரும்ப விரும்பவில்லை. ஆனால் பிறகு தலைசுற்ற ஆரம்பித்தது. அப்போது என்னுடன் வர்ணனை செய்துகொண்டிருந்த ஜஸ்டின் லேங்கரிடம் இதுபற்றி கூறினேன். 

    சேனல் செவன் தொலைக்காட்சியின் உயர் அதிகாரி கிறிஸ் ஜோன்ஸ் இதைக் கேள்விப்பட்டார். உடனே இருவரும் என்னை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். 

    10, 15 நிமிடங்களில் நான் மருத்துவனையில் இருந்தேன். எனக்கு அற்புதமான சிகிச்சை கிடைத்தது. இன்று காலையில் நல்லவிதமாக உணர்ந்தேன். இது புதிய காலை. என் வயதுடையவர்கள் தங்களுடைய உடல்நலன் பற்றி மற்றவர்களிடம் விவாதிப்பதில்லை. இது எனக்கு ஒரு பாடமாக இருந்தது. கடந்த ஒரு வருட காலத்தில் நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்ததைப் பார்த்தோம்..

    இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    பரங்கிமலை ரயில் நிலையத்தில் புது திட்டம்; வெளிவந்த தகவல்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....