Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'குந்தவையும், வானதியும் ஆட... ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க... ' - பொன்னியின் செல்வன் வெளியிட்ட வீடியோ..

    ‘குந்தவையும், வானதியும் ஆட… ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க… ‘ – பொன்னியின் செல்வன் வெளியிட்ட வீடியோ..

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ‘சொல்’ பாடலின் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ளது. 

    மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்துள்ளது. தற்போதும், திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

    இப்படத்தில் ரசிக்க பல விடயங்கள் இருந்தாலும், பலராலும் ரசிக்கப்பட்டது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்தான். பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, அலைகடல், தேவராளன் ஆட்டம், சொல் என அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். 

    இந்த பாடல்களின் வீடியோக்களையும், அவ்வபோது பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டு வருகிறது. பல பாடல்கள் வெளியிடப்பட்டாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், குந்தவை மற்றும் வானதி பாத்திரங்கள் பாடி ஆடுவதாக உருவாக்கப்பட்ட சொல் பாடலின் காணொளி எப்போது வெளியாகுமென பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

    இந்நிலையில், கிருத்திகா நெல்சன் வரியில், ரக்‌ஷிதா சுரேஷ் குரலில் சொல் பாடலின் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    திடீர் உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் காலமானார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....