பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து தேவராளன் ஆட்டம் பாடலின் வீடியோ வெளிவந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வனை இயக்கி வெளியிட்ட சந்தோஷத்தில் தற்போது மணிரத்னம் இருக்கிறார்.
500 கோடி என்ற மாபெரும் வசூலை நோக்கி பொன்னியின் செல்வன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தீபாவளி வெளியிடாக சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் திரைக்கு வந்தும், பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ரசிக்க பல விடயங்கள் இருந்தாலும், பலராலும் ரசிக்கப்பட்டது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்தான். பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, அலைகடல், தேவராளன் ஆட்டம் என அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சோழா சோழா’ மற்றும் ‘ராட்சச மாமனே’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில், ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் வீடியோ வெளிவந்துள்ளது. மேலும், அமேசான் பிரைம் ஓடிடியில் பொன்னியின் செல்வம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.