Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'திராவிட மாடல் ஆட்சி அல்ல, திராவிட மாதிரி ஆட்சி' - விமர்சித்த அரசியல் புள்ளிகள்!

    ‘திராவிட மாடல் ஆட்சி அல்ல, திராவிட மாதிரி ஆட்சி’ – விமர்சித்த அரசியல் புள்ளிகள்!

    “துக்ளக்” இதழின் ஆண்டு விழாவில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, மோடியை, பாஜகவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பாராட்டிப் பேசினார். கூடவே காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், இன்னும் பிற கட்சிகளை விமர்சித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி என்ற முழக்கத்தை கிண்டல் செய்து பேசினார்.

    அவருடைய பேச்சிலிருந்து…

    “திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் பேசுகிறார். கேட்டால் அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனக் கூறுகிறார். இதைத்தானே பிரதமர் மோடி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று பேச்சு.

    அடுத்ததாக நம்ம ஸ்டாலினின் திராவிட மாடல். அவர் மாநிலத்தில் நலத்திட்டங்கள் வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். 7.5% இட ஒதுக்கீடு வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுகிறார்.

    ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் அவரை யாரும் புகழ்ந்து பேசக் கூடாது. அவரை அவர் மட்டுமே புகழ்ந்து பேசிக் கொள்கிறார். நம்பர் 1 முதல்வர் எனக் கூறுகிறார். உழைப்பின் அடையாளம் எனப் பேசுகிறார். இப்படியாக குடும்ப ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது திமுக. திராவிட மாடல் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி என்று கூறியுள்ளார்.

    அடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திராவிட மாடல் பற்றி கூறியிருப்பதாவது:

    பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதித்துவிட்டு பின்னர் தமிழக அரசு சரணடைந்து நடத்தி கொள்ளலாம் எனக் கூறிவிட்டதாகவும், முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் வேறொன்று செய்வதே திராவிட மாடல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

    “பல்லக்கு தூக்கும் முறை செத்துவிட்டது. நவீன அறிவியல், இதுபோன்றவற்றை ஒழித்துவிட்டது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட பிறகு, இந்த நூற்றாண்டில் என்னை நீங்கள் தூக்கி சுமந்து செல்லுங்கள் என்று கூறுவதை திருவாடுதுறை ஆதீனமே வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும். அதே பல்லக்கில் இருந்துகொண்டு, ஒரு மோட்டரைப் பொருத்தி இழுத்துக்கொண்டு செல்லுங்கள். மக்களுக்கு வாழ்த்து கூறுங்கள், மக்களும் உங்களை பார்க்கட்டும்”.

    மேலும், சீமான் அவர்கள், நீங்கள் தூக்கி சுமந்து செல்லுங்கள், அது மரபு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இது காலங்காலமாக நடக்கிறது என்று கூறப்படுகிறது. காலங்காலமாக இங்கு சாதியிருக்கிறது, சாதியக் கொடுமை இருக்கிறது, மதமிருக்கிறது மதத்தின் பெயரில் நடக்கின்ற கொடுமைகள் இருக்கின்றன, வன்புணர்வு இருக்கிறது இதெல்லாம் காலங்காலமாக இருக்கிறது அனுமதியுங்கள் என்று கூறுவீர்களா? ஒரு பண்பட்ட சமூகத்தில் பட்டினப் பிரவேசத்தை தற்போது இருக்கின்ற இளைய சமூகத்தினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

    “பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதில் உறுதித்தன்மை இல்லை. உடனே சரணடைந்து, பட்டினப்பிரவேசத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதற்கு பெயர்தான் திராவிட மாடல். முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் ஒன்று செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல்” என்றும் சீமான் கூறினார்.

    மேலும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் திராவிட மாடல் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

    கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ரோட்டரி உத்சவ்-2022’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல நல்ல திட்டங்களை அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். திராவிட மாடல் என்று சொல்வதற்கு பதில் திராவிட மாதிரி என்றால் நன்றாக இருக்குமோ என்பது எனது யோசனை.

    இன்னொரு மொழியை வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில், நமது தாய்மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். 8 வயதுக்குக்குள் குழந்தைகளுக்கு அதிக மொழிகளை கற்றுக் கொடுக்கலாம். நிறைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் சக்தி குழந்தைகளின் மூளைக்கு உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து” என்றார்.

    பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்குமா மத்திய அரசு? அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....