Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து ...அரசியல் தலைவர்கள் இரங்கல்...

    குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து …அரசியல் தலைவர்கள் இரங்கல்…

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமானது சுற்றுலாவிற்கு வரும் முக்கிய இடமாக திகழ்கிறது. இந்நிலையில், இந்த தொங்கு பாலம் நேற்று அறுந்து விழுந்தது. தற்போது வரை இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்தது. 

    இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற துர்-சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவைகள் பின்வருமாறு: 

    பிரதமர் மோடி:

    குஜராத் பால விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. 

    குடியரசுத் தலைவர்:

    மோர்பி சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

    குடியரசு துணைத் தலைவர்:

    மோர்பி சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

    மத்திய உள்துறை அமைச்சர் :

    குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சிங்வியுடன் பேசியதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய குஜராத் மோர்பி பால விபத்து! பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

    குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல்: 

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.

    பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: 

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் விபத்து சம்பவம் தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

    குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: புளூ டிக் குறியீட்டை பறிக்க புதிய யுக்தி ..! ஆட் குறைப்பு..! எலான் மஸ்கின் அதிரடி…

    அன்புமணி ராமதாஸ்:

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த  தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்ச் மாதம் முதல் 7 மாதங்கள் நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு கடந்த 26&ஆம் தேதி தான் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. அடுத்த 4 நாட்களில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள்  இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்கப் படுவதையும், அவை முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....