Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி பாட்டில், கேன்களில் பெட்ரோல் வாங்க முடியாது; வந்து விட்டது அதிரடி தடை உத்தரவு

    இனி பாட்டில், கேன்களில் பெட்ரோல் வாங்க முடியாது; வந்து விட்டது அதிரடி தடை உத்தரவு

    தமிழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்க காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பாட்டில், கேனில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் திருவெறும்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் சுற்றறிக்கையை அங்குள்ள ஊழியர்களிடம் காவல்துறையினர் வழங்கினர். அதோடு பெட்ரோல், டீசல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்களிடமும் இது தொடர்பாக காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். 

    இந்த திடீர் உத்தரவினை அறியாத சில பொதுமக்கள் கேனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்தார்கள். அவர்களிடமும் உத்தரவு குறித்து தெரிவித்து, கேனில் பெட்ரோல் வழங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....