Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் விநியோகம் நிறுத்தம்; அவதிக்குள்ளான பொதுமக்கள்..

    ஆவின் விநியோகம் நிறுத்தம்; அவதிக்குள்ளான பொதுமக்கள்..

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை ஆவின் பால் விநியோகம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

    தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளை மூலமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆவின் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக பால் விநியோகம் சரிவர நடைபெறவில்லை . மேலும், கடந்த ஒரு வாரமாக தினமும் பல மணி நேரம் தாமதமாகவே பால் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இதில், செப்டம்பர் 1-ம் தேதியாகிய இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 22 விநியோக வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் இதில் ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை.

    வேலூர் மாநகர விநியோகஸ்தர்கள் மட்டும் தங்களது சொந்த வாகனங்களை கொண்டு பாலை ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை. இதனால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். 

    அனைத்து பொதுமக்களும் தனியார் பால் நிறுவனங்களை தேடி சென்றதால் தனியார் பால் விலை அதிகரித்து விற்கப்படுகிறது.இதுகுறித்து ஆவின் நிறுவனம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. 

    உயர்ந்த சுங்கச்சாவடி கட்டணம்; சிரமத்தில் மக்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....