Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமின் கட்டணத்தை உயர்த்தி கருத்து கேட்கும் அரசு!

    மின் கட்டணத்தை உயர்த்தி கருத்து கேட்கும் அரசு!

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த திங்கள்கிழமை (ஜூலை18 ) செய்தியாளர்களிடம் பேசினார். 

    இதுகுறித்து அவர், ஒன்றிய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அதன்படி, 101 யூனிட் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதகாவும் தெரிவித்தார். 

    இந்நிலையில், தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    மின் கட்டண உயர்வு குறித்து கருத்துகளை அளிக்க மின் நுகர்வோருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 22-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். மின் நுகர்வோர்களின் கருத்துகள் அனைத்தும் ஆகஸ்ட் 22-க்கு முன்னதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், மின்சார கட்டண விவரம் மின்வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஷாக் கொடுத்த செந்தில் பாலாஜி- உயரும் மின் கட்டணம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....