Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉதகையில் 125 வது மலர் கண்காட்சி! பூங்காவை அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள்

    உதகையில் 125 வது மலர் கண்காட்சி! பூங்காவை அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள்

    உதகையில் 125 வது மலர் கண்காட்சிக்காக பூங்காவை அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    சுற்றுலா பயணிகளை கவர உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைதுறை சார்பில், ஆண்டு தோறும் கோடை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு 125 வது மலர்கள் கண்காட்சி மே 19 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பூங்காவில் இருக்கும் பெரிய புல் மைதானத்தில் புற்கள் சமன் செய்து, தண்ணீர் தெளித்து பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதேபோன்று தாவரவியல் பூங்காவில் நுழைவு வாயில் மற்றும் நிழற்குடைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு வருகின்றது. மேலும் சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகளையும் நடைபாதைகளையும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருக்கும் டேலியா, வில்லியம், சால்வியா உள்ளிட்ட பல மலர்கள் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு கண் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    சடுகுடு ஆட்டம் காட்டும் திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமி காட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....