Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி பெற்ற பாகிஸ்தான்.. தொடரை விட்டு வெளியேறிய இந்தியா...

    வெற்றி பெற்ற பாகிஸ்தான்.. தொடரை விட்டு வெளியேறிய இந்தியா…

    கடைசி ஓவரில் 19 வயது பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா அடித்த இரு சிக்ஸர்களுக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

    நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான பரபரப்பான டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

    இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 

    வெற்றியின் பாதையிலேயே சென்றுக்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு இறுதி ஓவர்களில் தோல்வி பாதையின் சுவடுகள் தெரிந்தன. ஆம், கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் இருந்தது ஒரு விக்கெட் மட்டுமே. 

    இந்நிலையில், 10-வது ஆளாக களமிறங்கிய 19 வயது நசீம் ஷா, ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபரூகி வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார். இதன் மூலம், பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

    நசீம் ஷாவின் பேட்டிங் பற்றி பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறியதாவது:

    இது டி20 கிரிக்கெட். நசீம் ஷா இப்படி பேட்டிங் செய்து நான் பார்த்துள்ளேன். எனவே எனக்கு ஓரளவு நம்பிக்கை இருந்தது. ஷார்ஜாவில் மியாண்டட் அடித்த சிக்ஸரை இது ஞாபகப்படுத்தியது என்றார்.

    இதைத்தொடர்ந்து, வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தானின் வெற்றியால் ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய இரு அணிகளும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....