Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபத்மஸ்ரீ விருது பெற்ற பெண்ணுக்கே இந்த நிலையா? மருத்துவமனையில் அத்துமீறல்!

    பத்மஸ்ரீ விருது பெற்ற பெண்ணுக்கே இந்த நிலையா? மருத்துவமனையில் அத்துமீறல்!

    ஒடிசாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 71 வயதுடைய கமலா புஜாரியை நடனமாட வற்புறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா புஜாரி. இவருக்கு 71 வயதாகிறது. கமலா புஜாரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இயற்கை விவசாயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாக, இவர் உள்நாட்டு விதைகள் சேகரிப்பதிலும் ஈடுபட்டு வந்தார். 

    இந்நிலையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தற்காகவும், நூற்றுக்கும் மேற்பட்ட விதைகளை பாதுகாத்து வந்ததற்காகவும், இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது .

    இந்நிலையில், கமலா புஜாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் கட்டாக்கில் உள்ள எஸ் சி பி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புஜாரிக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர் .

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கமலா புஜாரி, ஓரளவு உடல் நலம் தேறி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

    இத்தகவலை அறிந்த மத்திய பிரதேச முதல்வர் நவீன் பட்நாயக், கமலா பூஜாரி விரைவில் குணமடைய வேண்டும் என்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் . 

    இந்நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது கமலா புஜாரியை நடனமாடச் சொல்லி வற்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான காணொளி தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    இதுகுறித்து, கமலா புஜாரி, ‘நான் ஒரு போதும் நடனமாட விரும்பவில்லை. இருப்பினும், அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன். ஆனால், அவர் (மம்தா பெஹரா) கேட்கவில்லை. என் உடல்நிலை சரியில்லாமல், நான் சோர்வாக இருந்த நிலையிலும் நடனமாட சொன்னார்’ எனத் தெரிவித்துள்ளார்.   

    இதுகுறித்து மருத்துவமனை பதிவாளர் மருத்துவர் அபினாஷ் ரவுத், கமலா புஜாரியை நடனமாட வைத்ததாக கூறப்படும் பெண், அவர் அனுமதிக்கப்பட்ட சிறப்பு அறைக்கு சென்றது உண்மை’ என தெரிவித்துள்ளார். 

    மேலும் இதுகுறித்து மம்தா பெஹரா, கமலா புஜாரி மிகவும் உற்சாகமில்லாமல் காணப்பட்டார். அதனால், அவரை உற்சாகப்படுத்தவே இதைச் செய்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....