Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சோனியா, ராகுலுக்கு மீண்டும் சம்மன்: கிண்டலடித்த ப. சிதம்பரம்!

    சோனியா, ராகுலுக்கு மீண்டும் சம்மன்: கிண்டலடித்த ப. சிதம்பரம்!

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது தான் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம். இந்நிறுவனம் சார்பில், நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை வெளியாகி வந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, ரூபாய் 90 கோடி 25 லட்சத்தை காங்கிரஸ் கட்சி கடனாக கொடுத்திருந்தது. நலிவடைந்த பத்திரிகையை மீட்பதற்காக தான், இந்தக் கடன் அளிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஒரு கட்டத்தில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அச்சிட்டு, வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகள், ‘யங் இந்தியா’ என்ற நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த பங்குகள் மிகக் குறைந்த விலையான 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

    யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம், 76% பங்குகள் உள்ளன. இந்தப் பங்குப் பரிவர்த்தனையில், முறைகேடு நடந்திருக்கிறது என்று கூறி, டெல்லி நீதிமன்றத்தில் பா.ஜ.க, மூத்தத் தலைவரான சுப்ரமணியன் சுவாமி, கடந்த 2013 ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை அடுத்து, வருமான வரித்துறை விசாரணை நடத்தி, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    வழக்கு தொடர்ந்து வரும் நிலையில், இந்த வழக்கைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், பாக்கெட்டும் இல்லை; பர்சும் இல்லை என அவர் கிண்டலடித்துள்ளார்.

    ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கை கிண்டலடிக்கும் விதமாக ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணப்பரிமாற்றம் செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை. ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? என அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    ‘சசிகலாவை நாங்கள் வரவேற்போம்’ – பாஜக அமைச்சரின் தடாலடி பேச்சால் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....