Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிகரிக்கும் பதற்றம்...இந்தியா-சீனா எல்லையில் என்னத்தான் நடக்கிறது?

    அதிகரிக்கும் பதற்றம்…இந்தியா-சீனா எல்லையில் என்னத்தான் நடக்கிறது?

    இந்தியா – சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இரு நாடுகளின் எல்லை விவகாரக் குழுவினர் சந்தித்து கள நிலவரத்தை ஆய்வு செய்தனர்.

    இந்தியா-சீனா இடையே அடிக்கடி எல்லை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. சீனாவின் இத்தகைய செயல்பாட்டுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

    கடந்த, 2020ல் இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் இரு நாட்டிற்கும் உயிரிழப்பு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்தியா முறியடித்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்பு படைகளும் எல்லையோரம் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, துாதரகம் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சு நடந்து வருகிறது.

    இதன்படி, கிழக்கு லடாக் எல்லையில் இருந்து சீன ராணுவம் வாபஸ் பெற்றது. எனினும் இன்னும் சில இடங்களில் சீனப் படைகள் உள்ளன. அவற்றை முழுவதுமாக வாபஸ் பெறுவது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்திய – சீன ராணுவ தளபதிகள், 15வது கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில் இந்திய – சீன எல்லையின் மேற்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை இயக்குனரக உயர் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் நேற்று சந்தித்து பேசின.

    அப்போது ‘கிழக்கு லடாக் எல்லையில் உள்ள சீன படைகளை முழுமையாக வாபஸ் பெற்றால் மட்டுமே இரு நாடுகள் இடையிலான நல்லுறவு மேம்படும்’ என, இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பு ராணுவ தளபதிகளின், 16வது கட்ட சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்வது என, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இதே போன்று, ஒரு வாரத்திற்கு முன்னர் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்தியதால் முன்னெச்சரிக்கையாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது. மேலும் டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல வசதியாக பாலம், சாலைகள் தயார்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ‘உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல்’ – சீமான் காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....