Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கரை கைப்பற்றிய 'நாட்டு நாட்டு' மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்..

    ஆஸ்கரை கைப்பற்றிய ‘நாட்டு நாட்டு’ மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்..

    ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    திரையுலகின் மிக முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் விருது. இந்த விருது வழங்கும் விழாவானது இன்று காலை அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கியது.

    இந்நிலையில் சிறந்த பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி), பாடலாசிரியர் சந்திர போஸ் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

    மேலும்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கீரவாணிக்கும், படக்குழுவினருக்கும் பல்வேறு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆஸ்கர் விருதுகள் அறிவிப்புக்கு முன்னதாக, மேடையில் ஒலித்த நாட்டு நாட்டு பாடலுக்கு இருந்த நூற்றுக்கணக்கானோர் நடனமாடி ஆரவாரம் செய்தனர். அதேபோல, சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பொன்னியின் செல்வன்; த்ரிஷா குந்தவை மாறியது இப்படித்தான் – வெளிவந்த வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....