Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நிலநடுக்கத்தால் உடைந்த அணை; சிரியாவில் மக்கள் அவதி!

    நிலநடுக்கத்தால் உடைந்த அணை; சிரியாவில் மக்கள் அவதி!

    சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளில் வடமேற்கு பகுதியிலிருந்த அணை உடைந்ததால் அப்பகுதியிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கியில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் துருக்கியில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா – துருக்கியில் 21,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளில் வடமேற்கு பகுதியிலிருந்த அணை உடைந்ததால் அப்பகுதியிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கெனவே கடும் குளிரில் இடிபாடுகளுக்கு மத்தியில் அந்நாட்டு மக்கள் அவதியுற்று வரும் நிலையில், தற்போது சிரியாவின் வடமேற்கு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால், இப்பகுதிகளிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

    நகைக்கடை ஷட்டரில் துளை; கிலோ கணக்கில் தங்க நகைகள் மாயம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....