Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு ! தொண்டர்கள் அதிர்ச்சி

    அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு ! தொண்டர்கள் அதிர்ச்சி

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம், அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் இரண்டு பிரிவுகளாக மோதிக்கொண்டனர்.

    இந்த மோதல் சம்பவத்தை அடுத்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தலைமை கழகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றியதோடு, அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20-ந் தேதி வரையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் யாரும் செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த பிரச்சனைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்லாமல் இருந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு தலைமை கழகத்தின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் எம் எல் ஏக்கள் , முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடி வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிலையில் பன்னீர் செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்திருந்ததோடு, ஓ.பி.எஸ் மற்றும் அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை, ராயப்பேட்டை காவல் நிலைய உதவி கமிஷனர் சார்லசிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை, பன்னீர்செல்வம் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல, நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால், உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியானது.

    இதையடுத்து காவல் நிலையத்தில் மனு அளித்த, ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், ”போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. பன்னீர்செல்வம் அவர்களும் ஊரில் இல்லை. அவர் வந்ததும் , அனைவருடனும் கலந்து பேசி தலைமை அலுவலகம் செல்லும் தேதியை அறிவிப்போம் என்று கூறினார். ஆனாலும் பன்னீர் செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை தரப்பில், அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓ.பி.எஸ். தரப்பினர் மீண்டும் அங்கு செல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் தற்போதைய சூழலில் நீங்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான விசாரணை நடக்கும் நிலையில், அங்கு செல்வது பிரச்சனையை மேலும் இன்னும் அதிகப்படுத்தி விட கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    அதுமட்டுமின்றி தற்போது அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமே இருந்து வருகிறது என்பதால், அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதையே கோர்ட்டு உறுதி செய்துள்ளது. உங்கள் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்திற்க்குள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று கோர்ட்டிலோ, அல்லது வருவாய் அதிகாரியிடமோ அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

    இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....