Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட ஓணம் - மகிழ்ச்சியில் மலையாள மக்கள்

    வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட ஓணம் – மகிழ்ச்சியில் மலையாள மக்கள்

    கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    கேரளாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாள மக்கள் அனைவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து மக்களாலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கேரளாவை ஆட்சி செய்த மாவேலி மன்னர் ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண வருவதை நினைவுகூறும் வகையில், மாவேலியை வரவேற்கும் விதமாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். பெண்கள் தங்களது வீடுகளில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....