Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் விரைவில் 'ஒரே டிக்கெட்' முறை..

    சென்னையில் விரைவில் ‘ஒரே டிக்கெட்’ முறை..

    சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது. 

    பொதுமக்களின் போக்குவரத்தை எளிமையாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய மூன்று சேவைகளையும் அடுத்தடுத்து பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அப்படி பயணம் செய்யும் பொழுது, மூன்று வெவ்வேறு டிக்கெட்டுகள் எடுக்க வேண்டி உள்ளது. இதனால் நேரமும் அதற்கான செலவும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

    இந்நிலையில், சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை எடுத்து வந்தது. 

    இதைத்தொடர்ந்து தற்போது இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்தத் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் என்ற நிறுவனத்துடன் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

    இதன் காரணமாக, ஒரே டிக்கெட் முறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது. 

    பழுதான செல்போனை சரி செய்து தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....